’நன்றி தாத்தா’.. 103 வயது ரசிகரை குஷிப்படுத்திய தல தோனி.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதீத அன்பை வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் அவரது அமைதியான போராட்ட குணமும் தான்.
A gift for the 1⃣0⃣3⃣ year old superfan 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) May 3, 2024
Full story 🔗 - https://t.co/oSPBWCHvgB #WhistlePodu #Yellove pic.twitter.com/hGDim4bgU3
இதனால் இந்தியாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த மைதானத்தில் விளையாடினாலும் சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தை ஆக்கிரமித்து விடுவார்கள். சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, தனக்கென ஒரு ரசிக உலகத்தை கொண்டுள்ளார். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 103 வயது ரசிகருக்கு தான் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.
அதில், உங்கள் ஆதரவிற்கு நன்றி தாத்தா. மேலும் இந்த 103 வயது ரசிகருக்கு சென்னை அணியினர் ஸ்பெஷல் ஜெர்சியில் ராமதாஸ் என்ற அவரது பெயரையும், வயதை ஜெர்சி எண்ணாகவும் அச்சிட்டுள்ளனர். இதைப் பெற்றுக்கொண்ட 103 வயது ரசிகர், “இப்படி கௌரவிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!