தை அமாவாசை... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்!
தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தென்மாவட்ட புண்ணிய ஸ்தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று தை அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே திரண்டனர். ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு நீண்ட வரிசையில் நின்று குளித்து அங்கு கூடியிருந்த வேத விற்பனர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மேலும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம், தாமிரபரணி, குற்றாலம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!