கட்டிட தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 5 பேர் உயிரிழப்பு!

 
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பஞ்ச்வார் மாவட்டத்தில் உள்ள பிரேமு என்ற இடத்தில் அணை கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அணை கட்டும் பணி நடைபெற்று வரும் பகுதிக்கு தீவிரவாதிகள் சிலர் வந்தனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதே நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web