கச்சத்தீவு அருகே பயங்கரம்.. மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்!

 
இலங்கை மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களை நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 500 விசைப் படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

​​அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது என்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்கு பயந்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் பலர் கடலில் விரித்த வலையை கூட எடுக்காமல் கரைக்கு திரும்பியதாகவும், மீன்பிடிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web