கோர விபத்து.. டிரைவருக்கு நெஞ்சு வலி.. தலைகீழாக கவிழ்ந்த பேருந்து..!!

 
வாழப்பாடியில் பேருந்து விபத்து
சேலம் வாழப்பாடி அருகே இன்று காலை டிரைவருக்கு நெஞ்சுவலியால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை ராசிபுரம் ஐயம்பாளையத்தைச் சேர்ந்த இளையராஜா (35) என்பவர் ஓட்டிவந்தார்.

The Private Bus Driver Who Was Coming To Salem Suffered A Sudden Chest Pain  And The Bus Accident. | Salem Bus Accident: சேலம் நோக்கி வந்த தனியார்  பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ...

காலை 9.30 மணி அளவில் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி டோல்கேட் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. அங்கிருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் வந்தபோது டிரைவர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து , சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!- Dinamani

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 10 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இளையராஜா, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை பேருந்தை மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீர்செய்தனர்.

From around the web