பயங்கர விபத்து... மதுராந்தகம் அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி!

 
கார் விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாவது வழக்கமாக இருந்து வருகின்றன. இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக மதுராந்தகம் அருகே வேன் ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து வேன் ஒன்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆட்களை ஏற்றிக் கொண்டு மதுராந்தகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, மதுராந்தகம் அருகே வேன், சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது.

விபத்து

இதில் காரை ஓட்டி வந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் காரில் பயணித்த சக்திவேல், குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்த வெங்கடேசன், பூவரசன் ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களில் பூவரசன் என்பவர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். வேனை ஓட்டி வந்த பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

தகவலறிந்து வந்த செய்யூர் காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web