பொலிவியாவில் பெரும் பதற்றம்.. ஆட்சியை கவிழ்க்க முயன்ற ராணுவ தளபதி கைது!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஆட்சிகவிழ்ப்புக்கு முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையில் 9 பேர் காயமடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் ஜாய்ஸ் ஆர்ஸ் ஆட்சி செய்து வருகிறார். இங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா சதி செய்தார். அவரது உத்தரவின் பேரில் ராணுவத்தின் ஒரு பகுதியினர் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டனர்.
நாடாளுமன்றத்தின் கதவுகளை கவச வாகனம் மூலம் உடைக்க முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸை நாங்கள் மதிக்கிறோம் என்று இராணுவத் தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறினார். இதேவேளை, நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜீலனன் அனீஸ் உட்பட பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையில் 9 பேர் காயமடைந்தனர்.இறுதியில், சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனியா கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு, படைகள் பின்வாங்கியதால் ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது. இந்த ராணுவ சதி முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், ஜனநாயகத்தை காக்க ஒன்றுபடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!