தெலுங்கு மக்கள் சர்ச்சை.. வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான நடிகை கஸ்தூரி!

 
கஸ்தூரி

சில நாட்களுக்கு முன் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சித்தார். நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது 300 வருடங்களுக்கு முன் வந்த மன்னன் மகளுக்கு பணிவிடை செய்ய வந்தவர்கள், தெலுங்கு மொழி பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று நீங்கள் சொல்லும் போது, ​​ஒரு காலத்தில் வந்த பிராமணர்கள் தமிழர் இல்லை என்று எப்படி சொல்கீறீர்கள் என கஸ்தூரி கூறினார். அதனால்தான் தமிழர் முன்னேற்றக் கழகம் என்று  யாரும் வைக்க மாட்டார்கள் என கூறுகின்றனர்.

கஸ்தூரி

நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெலுங்கு மக்களை கஸ்தூரி திட்டியதாக சர்ச்சை எழுந்தது. மறுநாள் நடிகை கஸ்தூரி பத்திரிகையாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.  அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கஸ்தூரி மீது இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரியை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சம்மன் அனுப்ப எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டி பூட்டப்பட்டிருந்தது. நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

நடிகை கஸ்தூரி ஆவேசம்! துக்ளக் குருமூர்த்திக்கு பதிலடி !

இதையடுத்து போலீசார் சம்மனை வீட்டின் சுவரில் ஒட்டினர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web