பைக்கில் போதை மாத்திரைகள் கடத்திய இளைஞர்கள்.. கையும் களவுமாக பிடித்த காவல்துறை!

 
லட்சுமணன் - கார்த்தி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில்  பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் வந்த வாகனத்தை போலீஸார் சோதனையிட்டபோது, ​​100க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்ததில், அவர்கள் பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. இதில் கார்த்தி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் லட்சுமணன் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இருவரும் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 100 போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவர் மீதும் பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web