ஓடும் பேருந்தில் இளம்பெண் மாரடைப்பால் மரணம்!
ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நிட்டவோலுவைச் சேர்ந்த இளம்பெண் ஹர்ஷா. இவர் படித்து முடித்து விட்டு மஸ்கட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் விஜயவாடாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக கோதாவரி செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
தன்னுடைய மகள் நீண்ட நாட்கள் கழித்து வீட்டிற்கு வருகிறார் என்று ஹர்ஷாவின் பெற்றோரும், உறவினர்களும் அவரது வருகைக்காக காத்திருந்தனர். விமான நிலையத்தில் புறப்படுவதற்கு முன்பாக தனதுச் செல்போனில் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கு அனுப்பியிருக்கிறார். பேருந்தில் ஹர்ஷாவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. இது குறித்து பேருந்தில் அமர்ந்திருந்த பிற பயணிகள் உடனடியாக பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், சிறிது நேரத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பேருந்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது, ஹர்ஷா மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.
பேருந்தின் பயணிகளிடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!