விருதுநகரில் ஆசிரியை கொலை... 3 இளைஞா்கள் கைது!

 
இளம் நடிகர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 இளைஞா்களை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருவள்ளுவா்நகரைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் (84.) இவரது கணவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த ஜீவரத்தினம், கடந்த நவம்பர் 24ம் தேதி வீட்டின் சமையல் அறையில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பீரோவில் இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால் ஜீவரத்தினம் கொலைச் செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். 

விருதுநகரில் ஆசிரியை கொலை... 3 இளைஞா்கள் கைது!

இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ராஜபாளையம் மதுரை வீரன் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் (30), தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள பெருங்கோட்டூரைச் சோ்ந்த முத்துகுமாா் (32), மதன் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனா். அவா்களிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தெற்கு வைத்தியநாதபுரம் தெரு பகுதியில் வசித்த வயதான தம்பதியா் ராஜகோபால், அவரது மனைவி குருபாக்கியம் ஆகியோரின் கொலை சம்பவத்திலும், வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களிலும் இவா்களுக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web