புயலாக மாறிய “டாணா”... மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும்!

 
டானா புயல்

  
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு வங்கக் கடல், அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது.

புயல்


மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை நகர்ந்து  தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.வடக்கு ஒடிஸா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சா தீவுகளுக்கு இடையே  வெள்ளிக்கிழமை அக்டோபர் 25ம் தேதி  காலை கரையைக் கடக்கக்கூடும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் டானா   புயலால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web