பாரா ஒலிம்பிக்: அடுத்தடுத்து பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 
ஸ்டாலின்
 

பாரா ஒலிம்பிக்கில் போட்டியில் அடுத்தடுத்து வெள்ளி, வெண்கல பதக்கங்களைக் குவித்து வரும் தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “பாராலிம்பிக்ஸ் 2024ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்.உங்களின் அர்ப்பணிப்பும், எதிலிருந்தும் மீண்டு வரும் பண்பும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்கமாக அமைந்துள்ளது. உங்கள் வெற்றியில் பெருமை கொள்கிறோம்.

அதே போன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மனிஷா ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “பாராலிம்பிக்ஸ் 2024ல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மனிஷா ராமதாஸ்க்கு வாழ்த்துகள்.உங்கள் மனவலிமையும் உறுதிப்பாடும் தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. எப்போதும் ஜொலித்துக்கொண்டே இருங்கள்” என பதிவிட்டுள்ளார். 

ஸ்டாலின்

மேலும் நித்ய ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பாராலிம்பிக்ஸ் 2024-ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது இந்தச் சிறந்த சாதனை; மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் நீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web