“எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்” கார்த்தி சிதம்பரம் பேட்டி!

 
கார்த்தி சிதம்பரம்

“எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கக் கூடாது” என்றும், “டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு என்று மத்திய அரசு இடம் ஒதுக்கி அனுமதிப்பதைப் போன்று, தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும்” என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கார்த்தி

இன்று சிவகங்கை  மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதிகளில் நகர வார்டு, கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை தற்போது செய்யாவிட்டாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் மேற்கொள்ளும். இதனால் வடக்கே பெரும்பாலான மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும். இது ஆபத்தானது. இதற்காக இப்போதே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டம் கூட்டியதை வரவேற்கிறேன். இந்தக் கூட்டம் குறித்து அண்ணாமலை கூறியது சில்லித்தனமான கருத்து.

உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக வெளியானது குறித்து ‘கொலீஜியம்’ தான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்திருப்பது வருத்தமளிக்கிறது. அதிலும் பிரதான சாலையில் பட்டப்பகலில் கொலை செய்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற பின்னர் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மாமூலாக கூறுவதை விடுத்து, முதல்வரும், டிஜிபியும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கார்த்தி சிதம்பரம்

எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். போராட்டம் அறிவிப்போரை முன்கூட்டியே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கக்கூடாது. மத்திய அரசு டெல்லியில் இடம் ஒதுக்கி போராட்டம் நடத்த அனுமதிப்பதை போன்று, தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web