இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் 12 பேரை, சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்கு துறையில் இருந்து இயக்கப்படும் விசைப் படகுகள், பல நாள் ஆழ்கடல் தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ஆர்.அந்தோனி மகாராஜா (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் உ.ரமேஷ் (36), ம.ஸ்டீபன் (47), ஜெ.அருண் (19), அ.அந்தோனி தாதிஸ் (20), அ.ஜார்ஜ் ராமு (20), சிப்பிகுளம் கல்லூரணியைச் சேர்ந்த ஆ.சுப்பிரமணியம் (63), சோலைமுத்து (41), ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த இ.எத்தையாகுமார் (30), நரிப்பூரைச் சேர்ந்த து.மாரியப்பன் (52), பெரியபட்டணத்தைச் சேர்நத் மு.சுரேஷ் (39), பாறைக்குளத்தைச் சேர்ந்த முருகராஜ் (20) ஆகிய 12 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.
அதே போல் ஜெ.அந்தோணி தென் டேனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்நத் சே.மிக்கேல் ஆல்வின்(20), மா.டேனியல் சஞ்ஜெய்(25), சில்வர் ஸ்டார்(20), அ.மிக்கேல் டேனியல்ராஜா(25), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த க.மாரி ஆனந்தன்(45), கீழ வைப்பாறைச் சேர்ந்த சூ.இன்னாசி(47), கீழ அரசரடியைச் சேர்ந்த அ.அழகுராஜா(28), வேம்பாரைச் சேர்ந்த அ.ஆரோக்கியனார்பட் (19), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த இ.ராசீன்(45), இ.விஜயகுமார்(43) ஆகிய 10 மீனவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடல் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.
இந்த 2 விசைப்படகுகளும் நேற்று பிற்பகல் இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது சீரற்ற வானிலை, கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் 22 மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
இந்நிலையில், மீனவர்கள் 22 பேரில், மகாராஜா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் உள்ள 12 மீனவர்களை மட்டும் இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களும் நாளை மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!