தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. ஓட்டுனர் பலி... 50 பயணிகள் படுகாயம்... வீடியோ...!
தமிழக எல்லையான குமரி மாவட்டத்தில் தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் கேரள பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தன.
தமிழக கேரள அரசு பேருந்துகள் மோதல்... ஒரு வர் பலி... 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்... ! pic.twitter.com/9fgNsIfWrN
— Dina Maalai (@DinaMaalai) February 3, 2024
அப்போது எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தமிழக, கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும், இரண்டு பஸ்களில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.50 பேர் காயங்களுடன் தப்பிய நிலையில் கேரள அரசு பேருந்து ஓட்டுனர் அனீஸ் கிருஷ்ணா மட்டும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க