20 ஓவர் உலகக் கோப்பை தொடர்: பரிசுத்தொகை அறிவிப்பு

 
20 ஓவர் உலகக் கோப்பை தொடர்: பரிசுத்தொகை அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற உள்ள போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.

20 ஓவர் உலகக் கோப்பை தொடர்: பரிசுத்தொகை அறிவிப்பு

முதல் அரையிறுதி போட்டி அபுதாபியில் நவம்பர் 10-ம் தேதியும், 2-வது அரையிறுதி துபாயில் 11-ம் தேதியும் நடக்கிறது, இறுதிப் போட்டி நவம்பர் 14-ம் தேதி துபாயில் நடக்கிறது.

குரூப்-2 பிரிவி்ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்திலேயே மோதுகின்றன. அக்டோபர் 24-ம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மாலை 6மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

20 ஓவர் உலகக் கோப்பை தொடர்: பரிசுத்தொகை அறிவிப்பு

அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் இந்தியா – நியூஸிலாந்துடன் மோதும் போட்டி துபாயில் நடக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி அபுதாபியில் நடக்கும் 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் – இந்திய அணி எதிர்கொள்கிறது.

20 ஓவர் உலகக் கோப்பை தொடர்: பரிசுத்தொகை அறிவிப்பு

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். இந்த தகுதி சுற்றில் வங்காளதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் விளையாட தகுதி பெரும்.

வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலககோப்பையை வென்றுள்ளன.

20 ஓவர் உலகக் கோப்பை தொடர்: பரிசுத்தொகை அறிவிப்பு

இந்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை ஐசிசி வெளியிட்டுள்ளது.

  • சாம்பியன் பட்டம் பெறும் அணி – 1600,000 டாலர் (ரூ.12 கோடி)
  • இரண்டாம் இடம் பெறும் அணி -800,000 டாலர் (ரூ.6 கோடி)
  • அரையிறுதியில் தோல்வி பெறும் இரண்டு அணிகளுக்கும் தலா – 400,000 டாலர் (ரூ. 3 கோடி)
From around the web