T20 உலகக் கோப்பை: இந்திய அணியின் புதிய ஜெர்சி மற்றும் போட்டி விவரம்

 
T20 உலகக் கோப்பை: இந்திய அணியின் புதிய ஜெர்சி மற்றும் போட்டி விவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற உள்ள போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தினர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது.

இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 18-ந்தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து இந்திய விளையாடுகிறது.

ரசிகர்களால் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாக்கிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 24-ம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் இந்தியா – நியூஸிலாந்துடன் மோதும் போட்டி துபாயில் நடக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி அபுதாபியில் நடக்கும் 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் – இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்திய அணி:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

From around the web