க்யூட் வீடியோ.. நடுவானில் விமானத்தில் காதலைப் ப்ரொபோஸ் செய்த இளம்பெண்!
நடுவானில், விமானத்தில் தன்னுடைய காதலைக் க்யூட்டாக ப்ரோபோஸ் செய்த இளம்பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உலகம் முழுவதுமே அனைத்து மதங்களும் அன்பைத் தானே பிரதானமாக போதிக்கின்றன. பணம் தான் முக்கியம் என்பவர்களும் அந்த பணத்தை தங்கள் அன்புக்குரியவர்களுக்காகவே சம்பாதிக்கிறார்கள். அன்பே பிரதானம். அன்பிற்காக ஏங்கித் தொலைவதிலேயே நீள்கிறது வாழ்க்கை. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரிடம் நம் அன்பை வெளிப்படுத்துவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது! சிலர் தங்கள் காதலை நடுவானிலும், சிலர் நீருக்கடியிலும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார்கள். ஆம், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஆச்சரியப்படுத்தவும், அவர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு சிறப்பு தருணத்தை உருவாக்கவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர்.
அதேபோல், விமானத்தில் பயணித்த காதலனை ஒரு பெண் தனது காதலை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஒரு பெண் தன் காதலனுக்கு ப்ரோபோஸ் செய்ய முழங்காலில் முட்டி போட்டார். அந்த பெண் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவில், ஒரு பெண் தனது காதலனுடன் விமானத்தில் ஏறுகிறார்.
பின்னர் இண்டிகோ விமானக் குழுவினர் விமானத்தில் தனது காதலனை நோக்கிச் செல்லும் பெண்ணுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிடுகின்றனர். எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென தன் காதலியை எதிரில் பார்த்த காதலன் ஆச்சரியப்படுகிறான். அந்த பெண் தன் காதலன் முன் மண்டியிட்டு தன் காதலை அவனிடம் தெரிவிக்கிறாள். பின்னர், இந்த ஜோடி ஒரு நெருக்கமான தருணத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா