திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி நேரில் ஆய்வு!

 
திருச்செந்தூர்
 

 


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கந்த சஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகின்ற நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹார நிகழ்வும் நவம்பர் 8ம் தேதி அன்று திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற உள்ளது. 

திருச்செந்தூர் முருகன்

மேற்படி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பா. மூர்த்தி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  ஆகியோர் திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று சூரசம்ஹாரம் நடைபெறும் இடம், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web