லட்டு விவகாரம்... சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து உச்சநீதிமன்றம் அவருக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி கோவில் பிரசாதம் லட்டுவில் நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்துள்ளதாக நாயுடு பொது வெளியில் கருத்து வெளியிட்டது சரியான போக்கு இல்லை.
மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது தவறு என சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய்யை லட்டுவில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை .
இவ்வகையான தகவல்களை உறுதி செய்யாமல் பொது வெளியில் பேசுவதால் பொதுமக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படலாம் என விளக்கம் அளித்துள்ளது. மக்களின் மத உணர்வுகளை முதல்வராக , மனித நேயத்துடன் சந்திரபாபு நாயுடு மதிக்கவேண்டும். சென்சிட்டிவான கருத்துக்கள் எந்தவித ஆதாரமின்றி பேசப்படுவது தவறானது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!