மாஸ் வீடியோ... சூப்பர் ஸ்டார் கிழிந்த சட்டையுடன் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சண்டை!

 
ரஜினி

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  'வேட்டையன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி வெளிநாட்டுவாசிகளுடன்  சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இந்த சண்டைக் காட்சியில்  நடிக்கும் ரஜினி கேரவனில் இருந்து வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 RDX பட இயக்குனர் சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் மாஸ்டர்கள் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதில்  புகைப்படத்தில் ரஜினி அணிந்திருக்கும் சட்டை கிழிசலுடன் இருக்கும்.  இதன்படி வேட்டையன் படத்தின் சண்டை காட்சிகள் மிகவும் தீவீரமாக இருக்கலாம் என்கின்றனர் ரஜினி வெறியர்கள்.   இதுவே கிளைமாக்ஸ் காட்சிகளாக இருக்கலாம்  இந்த வயதிலும், ரஜினிகாந்த் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் தானாக முன் வந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தலைவா என என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web