சூப்பர்.. ஒரே மொபைல் ஆப்பில் ரயில், விமான டிக்கட் முன்பதிவு சேவைகள்!

 
ரயில்

அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ அடுத்த 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி ஆன்லைன் மூலம்  டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இது தவிர, சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில் சுற்றுலா என தனித்தனி செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரயில்வே  முன்பதிவு

இதனால், ரயில்வே பயனாளர்கள் ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமத்தை  ஏற்படுத்துகிறது. எனவே, ரயில்வேயின் அனைத்து சேவைகளையும், ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ எனும் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள்  ‘புதிதாக உருவாக்கப்படும் சூப்பர் மொபைல் ஆப் மூலம் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். டிக்கெட் ரத்து செய்த அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும்ப பெற உதவும். பி.என்.ஆர்., சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர், விமான டிக்கெட் முன்பதிவு, கழிப்பறைகள், கால்டாக்சி முன்பதிவு வசதிகளையும் பெறலாம்.

ரயில் முன்பதிவு

சரக்கு பார்சல் அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உட்பட வசதிகளும் இடம்பெற்றுள்ளது.  இந்த மொபைல் போன் செயலியை உருவாக்கும் பணிகள்  இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களில் சூப்பர் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படும். இந்த ஆப் பயன்பாட்டிற்கு வரும்போது, பயணிகள் அனைத்து வசதிகளும்  ஒரே செயலியில் எளிதில் பெறலாம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web