பார்ட்டியில் சூப்பர் டான்ஸ்.. அடுத்த நொடியே தலைமைக் காவலருக்கு நேர்ந்த சோகம்.. ஷாக் வீடியோ வைரல்!
ரவிக்குமார் டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2010ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 28ம் தேதி ரவிக்குமார் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்றார்.
#Delhi: Head constable dies of #cardiacarrest while dancing in a farewell party. Om Shanti! https://t.co/uMiczVsaCN pic.twitter.com/yITy9AVarJ
— Dee (@DeeEternalOpt) August 29, 2024
பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். ஆனால் அதுவே அவரது கடைசி நடனம் என்பது அவருக்கு அப்போது தெரியாது. மகிழ்ச்சியாக நடனமாடி சிரித்துக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று மயங்கி விழுந்தார்.
நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் 45 நாட்களுக்கு முன்புதான் ரவிக்குமாருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது தெரியவந்தது. தற்போது அவர் மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!