பெரும் சோகம்... திடீரென அறுந்து விழுந்த மின் வயர்.. புது மணப்பெண் பரிதாப மரணம்!
கர்நாடக மாநிலம், பாதாமி தாலுக்கா, பாகல்கோட் மாவட்டம், சின்சலாகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து லட்சுமிபாய் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரியும் லட்சுமணன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். லட்சுமிபாய் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால், வீட்டில் இறக்கி விடுவதாக கூறினார். இதனால் அவருடன் செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது குனிகல் நோக்கி டூவீலர் சென்றபோது, சாலையின் நடுவில் இருந்த கேபிள் ஒயர் அறுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற லட்சுமிபாய், லட்சுமணன் மீது விழுந்தது. இதில் அவர்கள் துடிதுடித்து கத்தினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த தலைமை ஆசிரியர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சுமி பாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக குனிகல் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லட்சுமிபாய் ஜாதவ் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியால் சின்சலகட்டே பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!