திடீர் ட்விஸ்ட்... பெட்ரோல், டீசல் விலை உயராது... மத்திய அரசு திட்டவட்டம்!

 
பெட்ரோல்

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்த்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இது குறித்து செய்திக்குறிப்பு மற்றும் விளக்கத்தை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி என்பது எரிபொருள் விலையில் சேர்க்கப்படும் ஒரு முக்கிய அம்சம் என்பதால், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைதள பக்கங்களில் விலை உயருமா என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர். 

சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் அதிர்ச்சியுடன் கேள்விகளை எழுப்ப தொடங்கியவுடன் மத்திய அரசு அதற்கு விளக்கமும் அளித்துள்ளது. மத்திய அரசு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ 2 உயர்த்தியிருந்தாலும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளில் எந்த உயர்வும் இருக்காது ” என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்

 மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், எந்த தேதி முதல் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியானதும் வரிகள் உயர்த்தப்படும். இந்த வரி உயர்வு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பொருந்தும், ஏனெனில் கலால் வரி மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web