தூத்துக்குடியில் சுப்பிரமணியசாமி தெய்வானை திருக்கல்யாணம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 
தூத்துக்குடி சிவன் கோயில் சுப்பிரமணியசாமி முருகன் திருக்கல்யாணம்

தூத்துக்குடி சிவன் கோவில் நடந்த சுப்பிரமணியசாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் அறக்கட்டளை சார்பில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

முருகன்

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சுப்பிரமணியசாமி பல்வேறு அலங்காரத்தில் ரதவீதி வரும் நிகழ்ச்சி நடந்தது. 7ம் தேதி சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு இன்று சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட தெய்வானை அம்மாள் ரத வீதி சுற்றி வந்து தபசு மண்டபத்தில் எழுந்தருதல் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு 21 வகையான சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மாள் மாலை மற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வேட்டியும் தெய்வானை அம்மாளுக்கு பட்டு சேலையும் சாத்தப்பட்டு தீபாரனை நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி

பின்னர், சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மாள் பித்தளை சப்பரத்தில் ரத வீதி சுற்றி வந்து திருக்கோவிலை அடைந்தனர். அங்கு சங்கரா ராமேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web