பிரமிக்க வைக்கும் காட்சிகள்.. ஆபத்தான நீர்வீழ்ச்சிகளை அசால்ட்டாக கடந்த 4 பேர்!

 
காபோன்

காபோனில் உள்ள ஆபத்தான நீர்வீழ்ச்சிகளை கயாக் படகுகள் மூலம் கடந்து 4 பேர் கொண்ட குழு சாதனை படைத்துள்ளது. காபோன் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இங்குள்ள ஐவிண்டோ ஆறு உயரமான மற்றும் பல்வேறு நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட ஆபத்தான நதியாகும். இந்நிலையில் 145 கிலோமீட்டர் நீளமுள்ள இவிண்டோ ஆற்றின் ஆபத்தான நீர்வழிப்பாதையில் 4 பேர் கொண்ட குழு பயணிக்க முடிவு செய்து பயணத்தை தொடங்கியது.

வழியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட அவர்கள், வெள்ளம் மற்றும் உயரமான நீர்வீழ்ச்சிகளை கடந்து செல்லும் காணொளி பிரமிப்பை ஏற்படுத்தியது. காட்டாற்று வெள்ளத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதும், அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரர்கள், அபாயகரமான ஐவிண்டோ ஆற்றை கயாக் படகுகள் மூலம் கடந்த முதல் குழுவாக புதிய சாதனை படைத்துள்ளனர். சவாலான நீர்வழிப்பாதையை கடக்கும் சாகச காட்சிகள் ஆளில்லா விமானங்கள் மூலம் பல்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web