திகிலூட்டும் அதிர்ச்சி! இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!

 
திகிலூட்டும் அதிர்ச்சி! இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!


கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா அதன் கோர தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்துமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் உலக நாடுகளில் நிலவி வரும் மரணங்கள் , பட்டினிகள், வறுமை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

திகிலூட்டும் அதிர்ச்சி! இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!

அந்த வகையில் நடப்பாண்டில் உலகில் சுமார் 116 நாடுகளில் பசியால் வாடுபவர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உட்ப்ட 4 வகையான அம்சங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

திகிலூட்டும் அதிர்ச்சி! இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!


கடந்த ஆண்டு வரை 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் 76வது இடத்திலும், பாகிஸ்தான் 92வது இடத்திலும் உள்ளது.அதைக்காட்டிலும் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது மிக வேதனையான விஷயம் தான் என்கின்றனர் சமூக சுகாதாரத்துறை ஆர்வலர்கள்.


இந்தியாவை அடுத்த இடத்தில் பப்புவா நியூகினியா 102 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான், நைஜீரியா 103வது இடத்திலும், காங்கோ 105வது இடத்திலும் உள்ளன. 116 வது இடமான கடைசி இடத்தை சோமாலியா நாடு பிடித்துள்ளது.
அதேபோல், பட்டினிகளால் அதிகம் வாடுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 31வது இடத்தை பிடித்துள்ளது.

திகிலூட்டும் அதிர்ச்சி! இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!

கொரோனா காரணமாக ஒரே ஆண்டில் மட்டும் புதிதாக கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளதாக ஆய்வறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பட்டினியை ஒழித்த முதல் பத்து நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா ஆகியவை இடம் பிடித்துள்ளன.

From around the web