அதிர்ச்சி... பள்ளிக் கழிவறையில் மாணவி மின்சாரம் தாக்கி படுகாயம் !!

 
ஜோஸ்லின் ஜெனியா

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தில் வசித்து வருபவர்   டேவிட்ராஜ். இவருடைய  மனைவி ஜெனிபர். அவருடைய  மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார்.  ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி  ஆகஸ்ட் 5 ம் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து  ஒரு வயர் ஒன்று அறுந்து தொங்கியது. இதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.  இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்லின் ஜெனியா படுகாயம் அடைந்தார்.  

ஜோஸ்லின் ஜெனியா

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டு கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்கவில்லை. ஜோஸ்லின் ஜெனியாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சென்று காண்பித்தனர். இதில் அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத காது கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறியுள்ளனர்.  சிறுமி ஜோஸ்லின் ஜெனியா அரசு பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி அடிபட்டுள்ளார்.

மின்சாரம்

இந்நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் தாய் ஜெனிபர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெனிபர்  “திருப்பூர் செரங்காட்டில் வசிக்கும் நான் கூலித்தொழில் செய்து  வருகிறேன். மகள் ஜோஸ்லின் ஜெனியா மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள். எனது மகள் ஜோஸ்லின் ஜெனியாவுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்பு,  கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லை.  தமிழக அரசு  எனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web