அதிர்ச்சி... நூடுல்ஸ் சாப்பிட்டதால் +1 மாணவி மரணம்?! போலீசார் விசாரணை!

 
ஸ்டெபி
 

தமிழகத்தில்  திருச்சி மாவட்டம் அரியமங்கலம், கீழஅம்பிகாபுரத்தில் மர்மமான முறையில் பிளஸ் 1 மாணவி உயிரிழந்த நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சிக்கையில் மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலைத் தர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம், கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில். ரயில்வே துறையில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (16).  திருச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்த ஸ்டெபி ஜாக்லினுக்கு நூடுல்ஸ் அதிகளவில் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. 

ஆம்புலன்ஸ்

அடிக்கடி நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமுடைய ஸ்டெபி வழக்கம்போல் நேற்றும் ஆன்லைன் மூலமாக நூடுல்ஸ் ஆர்டர் செய்து இரவு சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகள் ஸ்டெபியை எழுப்ப ஜூடி முயற்சித்த போது ஸ்டெபி எழவில்லை. அதன்பின்னரே ஸ்டெபி உயிரிழந்தது குடும்பத்தாருக்கு தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெபியின் இறுதி சடங்குகளுக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் ஏற்பாடு செய்து வந்த நிலையில், மாணவி ஸ்டெபியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அரியமங்கலம் போலீசார் இன்று காலை ஸ்டெபியின் வீட்டிற்குச் சென்று ஸ்டெபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றபோது, ஸ்டெபியின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உத்தரபிரதேச போலீஸ்

பின்னர், தங்களுக்கு புகார் வந்துள்ளதாகவும், அதனடிப்படையில் ஸ்டெபியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் தர முடியும் என்று கூறிய போலீசார், ஸ்டெபியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். மாணவியின் மரணத்திற்கான காரணம் மர்மமாக உள்ள நிலையில், ஸ்டெபியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web