இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு மாணவி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி பின்னணி!

 
விருத்தாச்சலம் மாணவி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் படிக்ககூடிய மாணவிகள் என, சுமார்  10 முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவ  மாணவிகளுக்காக, வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளால் மாணவிகளுக்கு, ரத்த சோக நோய், உடல் வளர்ச்சி பாதிப்பு, உடல் சோர்வு,  படிப்பில் நாட்டம் இல்லாமல் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த இரும்பு சத்து மாத்திரைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நேற்று விருத்தாச்சலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள்  பள்ளிகளில் இரும்புச்சத்து மாத்திரைகள்,  வழங்கப்பட்ட நிலையில்,  அதிகளவில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு மாணவிகள் மயக்கம் அடைந்தும், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு அதிகளவில் மாத்திரை சாப்பிட்ட மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உட்பட மூன்று பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வியாழக்கிழமை வழங்கப்படும் இரும்பு சத்து மாத்திரையானது, ஒரு மாணவிக்கு, ஒரு மாத்திரை மட்டுமே வழங்கப்படும் நிலையில், ஏழு மாத்திரைகள் ஒரே சமயத்தில் முழங்கிய மாணவி ஒருவர் மயக்கம் அடைந்தும்,   பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு, 20 மாத்திரைகளை சேர்த்து வைத்திருந்த மாணவி, ஒரே நேரத்தில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி ஒருவரும்,  இரும்பு சத்து மாத்திரையை சாப்பிட்டு  மயக்கம் அடைந்தத இரண்டு பேர் என  மூன்று பேர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு  வந்துள்ளனர்.

 இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், இரும்பு சத்து மாத்திரைகளை மாணவிகளுக்கு வழங்கும்போது, அம் மாணவிகள் அந்த மாத்திரைகளை உட்கொண்டர்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கண்காணிக்க தவறியதால், மாணவிகள் மாத்திரைகளை உட்கொள்ளாமல், ஒன்றாக சேர்த்து வைத்து, ஒரே நேரத்தில் உட்கொள்வதாகவும், அதேபோல் ஒரு சில மாணவிகள், தவறான எண்ணத்தில் இரும்புச்சத்து  மாத்திரை உட்கொள்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் ஆசிரியர்கள்  அரசு பள்ளி  மாணவிகளுக்கு வழங்கப்படும், இரும்பு சத்து மாத்திரைகள் எவ்வாறு உட்கொள்வது,  தவறான எண்ணத்தில், மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வை, மாணவிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web