மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: உதயநிதி உறுதி
மேலும், போராட்டம் அறிவித்திருக்கும் மருத்துவர் சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துளள்ர். அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைந்தார் துணை முதல்வர் உதயநிதி. அங்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்த கண்காணிக்கப்பட்டு வருகிறது, அவரது தலையில் 4 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறோம். ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால், அவர் மீது சந்தேகம் எழவில்லை.
மருத்துவர் பாலாஜி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவர். நோயாளிக்கு, சர்வதேச தரப்படி என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவர் பாலாஜிதான், அவரது மகனிடம் நிலைமையை விளக்கியிருக்கிறார். ஓமந்தூரார் மருத்துவமனையில் பல ஆண்டு காலம் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை அளித்த சிறந்த மருத்துவர், சிறந்த மனிதர். நோயாளிகளிடமும் தன்மையுடன்தான் நடந்துகொள்வார் என்று மருத்துவமனை மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கும் மருத்துவ சங்கங்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது என்று உதயநிதி கூறியிருக்கிறார்.
தொடர்ந்து இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் என்றாலே சரியான சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பரவிடக்கூடாது, அது சரியானதும் இல்லை, இங்கு பல மருத்துவர்கள் ஆத்மார்த்தமாக சேவையாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!