அதிர்ச்சி!! தமிழகத்தில் வேகமாய் பரவும் டெங்கு!! குழந்தைகளை அதிகமாய் தாக்கும் அபாயம்!!

 
அதிர்ச்சி!! தமிழகத்தில் வேகமாய் பரவும் டெங்கு!! குழந்தைகளை அதிகமாய் தாக்கும் அபாயம்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் என்பதால், உங்கள் வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும் தூய்மையாக வைத்திருங்கள்.

அதிர்ச்சி!! தமிழகத்தில் வேகமாய் பரவும் டெங்கு!! குழந்தைகளை அதிகமாய் தாக்கும் அபாயம்!!

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை காட்டிலும் டெங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற அதிர்ச்சி தரும் தகவலையும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி!! தமிழகத்தில் வேகமாய் பரவும் டெங்கு!! குழந்தைகளை அதிகமாய் தாக்கும் அபாயம்!!

சென்னை தரமணி கல்லுக்குட்டையில் ஒரே பகுதியை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அந்தப் பகுதி முழுவதும் மழைநீர் அதிக அளவு தேங்கியிருப்பதால் பகலில் கூட கொசு தொல்லை இருப்பதாகவும் இதனால் டெங்கு பரவியிருக்க கூடும் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதிர்ச்சி!! தமிழகத்தில் வேகமாய் பரவும் டெங்கு!! குழந்தைகளை அதிகமாய் தாக்கும் அபாயம்!!

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாரசிட்டாமல் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது எனவும், வேறு மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி கொடுக்கும் பட்சத்தில் பிளேட்லெட் குறையக்கூடும் எனவும் மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தவிர பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதை ஐந்து நாட்களுக்கு பிறகு தான் கண்டறிய முடியும்.

ஆனால் முதல் இரண்டு நாட்களிலேயே டெங்குவின் பாதிப்பை உறுதி செய்ய முடியும். எனவே காய்ச்சல் ஏற்பட்ட உடனே பாதிப்பு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் மட்டும் குழந்தைகள் உட்பட 41 பேர் டெங்குவிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

From around the web