பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் நேரில் இறுதி அஞ்சலி....!!

 
ஸ்டாலின் அஞ்சலி

நேற்று மாலை மாரடைப்பால் காலமான பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழ்கம், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேன்கள், பஸ்கள் பிடித்து வந்து கால்கடுக்க நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சோகத்திலும் பக்தர்களின் பசிப்பிணி போக்க அதிகாலை முதலே இட்லி, தோசை, பொங்கல் அன்னதானமும் ஒரு புறம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 

 பங்காரு அடிகளார் கடந்த ஒரு வருட காலமாகவே உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு அமித்ஷா உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.  ஆன்மிக சேவை மட்டுமின்றி கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வந்தவர் பங்காரு அடிகளார்.

ஸ்டாலின் அஞ்சலி

தமது சேவைக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ஆன்மிகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உட்பட  பல கல்வி நிறுவனங்கள்  செயல்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை உண்டு. இவரது ஆன்மீக சேவையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பக்தர்கள் இவரை அன்புடன் அம்மா என அழைத்து வந்தனர். 

பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின்  மறைவையொட்டி, இன்று அக்டோபர் 20ம் தேதி  வெள்ளிக்கிழமை மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுஅவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் முதல்வர் ஸ்டாலின் உட்பட  பல  அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி இன்று மாலை 5 மணிக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில், பங்காரு அடிகளார் திடீர் மறைவு செய்தியை அறிந்த பக்தர்கள் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மேல்மருவத்தூர் பகுதிக்கு  நேரில்  அஞ்சலி செலுத்துவதற்காக ஆண்கள், பெண்கள், சிறார்கள் அனைவரும்   சிவப்பு நிற ஆடை அணிந்து கண்ணீர் மல்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web