முதல்வர் ஸ்டாலின் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார்... !

தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக முன்னெடுக்க தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக வெளிநாட்டில் உள்ள முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பல முயற்சிகளை செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
அதில்ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வரிசையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமீபத்தில் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஜனவரி 27ம் தேதி சனிக்கிழமை இரவு மு.க.ஸ்டாலின் வெளிநாடு புறப்படுகிறார்
இதற்காக இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் செல்லும் முதல்வர் அங்கிருந்து சுவீடன் அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகளை சந்திக்க இருக்கிறார். பிப்ரவரி 7ம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர் . இந்த 10 நாட்கள் சுற்றுப்பயணத்தில், தமிழகத்துக்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகள் வரும் என பொருளாதார நிபுனர்கள் கணித்துள்ளனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க