இலங்கை சிறையில் உடல்நலக் கோளாறால் அவதிப்படும் மீனவர்கள்.. மீட்குமாறு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இதய நோய் மற்றும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மகேந்திரன், ராமுசுந்தரம், மோகன், பாண்டி, ராம்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரு விசைப்படகுகளில் முத்து கருப்பையா உட்பட 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் படகில் சென்ற மீனவர்கள் அவர்களை யாழ்ப்பாணம் மீன் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 16 பேரும் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத சூழ்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு புதன்கிழமை (நேற்று) மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனிடையே, ராமேஸ்வரம் மீனவர்களின் 16 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு ராமேஸ்வரம் அனைத்து படகு மீனவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான அன்பழகன் மூளையில் நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதைபோல், இதய நோயால் தினமும் மாத்திரை சாப்பிடாமல் தூங்க முடியாத சூழ்நிலையில் மீன்பிடிக்கச் சென்ற மாணிக்கம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இரு நாட்டு அரசுகளும் நல்லிணக்க அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!