ஏப்ரல் 10 முதல் சேலம் வழியாக ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்!

 
ரயில்

 இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் பலரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இவர்களின் தேவை மற்றும் வசதிக்காக இந்தியன் ரயில்வே சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக கோவை - பகத் கி கோதி (ஜோத்பூர் ராஜஸ்தான்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

ரயில்

அதன்படி கோவை - பகத் கி கோதி வாராந்திர சிறப்பு ரயில் (06181) ஏப்ரல் 10ம்  தேதி முதல் ஜூலை மாதம் 3ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக அதிகாலை 5.15 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு பகத் கி கோதி நிலையம் சென்றடையும்.

ரயில்

  கோதி - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06182) ஏப்ரல் 13  முதல் ஜூலை 6ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமையில் பகத் கி கோதி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை காலை 5.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 9.30 மணிக்கு கோவை சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web