இன்று திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே ஏற்பாடு!

 
ரயில்
 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

ரயில்

அதன்படி திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06732) திருச்செந்தூரில் இருந்து இன்று நவம்பர் 7 இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். அதே போன்று மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06731) திருநெல்வேலியில் இருந்து இன்று நம்பர் 7 இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். 

ரயில் டிக்கெட்

இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்க நல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில்  நின்று செல்லும். இந்த ரயில்களில் 9 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web