விநாயகர் சதுர்த்தி சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தொடர்பாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
செப்.6-ல் சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்
செப்.6-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து 3.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11.45-க்கு கோவையை வந்தடையும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து செப்.8 இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 7.35க்கு சென்னை சென்ட்ரல் வரும்.
செப்டம்பர் 6ம் தேதி 13,20-ல் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில்
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி தாம்பரம் கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். செப்.6, 13, 20-ல் தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11.30க்கு கொச்சுவேலி செல்லும். கொச்சுவேலி-தாம்பரம் (06036) இடையே செப்.7, 14, 21-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
அதே நேரத்தில் செகந்திராபாத் – கொல்லம் இடையே செப். 11, 18, 25, அக். 2,9,16,23,30 மற்றும் நவ. 6, 13,20,27 புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொல்லம்-செகந்திராபாத் வாராந்திர ரயில் ரத்து
கொல்லம் செகந்திராபாத் இடையே செப்டம்பர் 11,18, 25 அக்.4, 11, 18, 25, நவ.1,8, 15, 22, 29ல் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!