போட்றா வெடிய ... கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை... தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் 2023 மற்றும் 2024 ம் ஆண்டுகளில் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் பதிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போது சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் இதற்கான ரூ247 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிப்பதற்காகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசை பொறுத்தவரை கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலையாக ரூ.2919.75ஐ நிர்ணயித்துள்ளது. இதனுடன் ரூ215ஐ சிறப்பு ஊக்கத்தொகையாக மாநில அரசு நிர்ணயத்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக ஒரு டன்னுக்கு விவசாயிகளுக்கு ரூ.3134.75 வழங்கப்படும். எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 2023-24 ம் ஆண்டில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரம் முறையாக சேகரிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான குழு பரிந்துரையின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.20 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!