காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த தடை... பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!

 
மாணவிகள்

 தமிழகம் முழுவதும்  பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி நாளை செப்டம்பர் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. அதே போல் செப்டம்பர் 18ம் தேதி 11, 12  மாணவர்களுக்கான தேர்வு  தொடங்கியது. இந்நிலையில்  செப்டம்பர்  28 முதல் அக்டோபர் 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மொத்தமே 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது .

தேர்வு

 
காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு அதனை பரிசீலித்து தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.  அதன்படி அக்டோபர் 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு
இந்நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web