தீபாவளிக்கு 14086 சிறப்பு பேருந்துகள்... சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்துக்கோங்க!

 
சிறப்பு பேருந்துகள்


 
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் பணிபுரிபவர்கள் இங்கிருந்து சொந்த ஊர் செல்வது வழக்கம். இவர்களின் தேவை மற்றும் வசதிகளை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.  

அரசு பேருந்துகள்

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, அலங்காரப் பொருட்கள் பர்ச்சேஸ் தான் முதல் இடத்தை பிடிக்கின்றன.  வெளியூர்களில் வசிக்கும் மக்கள், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு, இந்த ஆண்டும் அதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பேருந்துகள்

இந்தாண்டு 14,086 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது.அக்டோபர் 28,29 30  தேதிகளில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்  பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என  போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web