தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: யாருக்கு சாம்பியன்ஷிப் கோப்பை? இந்தியா – நேபாளம் இன்று மோதல்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: யாருக்கு சாம்பியன்ஷிப் கோப்பை? இந்தியா – நேபாளம் இன்று மோதல்

மாலத்தீவில் நடைபெற்று வரும் 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: யாருக்கு சாம்பியன்ஷிப் கோப்பை? இந்தியா – நேபாளம் இன்று மோதல்

அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சுனில் சேத்திரி 124 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்தத்தின் மூலம் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 77 கோல்களுடன் 9-வது இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவை பின்னுக்கு தள்ளினார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: யாருக்கு சாம்பியன்ஷிப் கோப்பை? இந்தியா – நேபாளம் இன்று மோதல்

இந்த நிலையில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (சனிக்கிழமை) நேபாளத்தை சந்திக்கிறது. 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யூரோஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

From around the web