மறைந்த தந்தையை கல்யாணத்திற்கு அழைத்து வந்த மகன்.. திருமணத்தில் நெகிழ்ச்சி தருணம்..!

 
அன்பரசு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார். அன்பரசின் தந்தை சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார்.

Wax Statue

இந்நிலையில், சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும் , அன்பரசுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அப்போது காவலாளி அன்பரசு, சிறுவயதில் இருந்தே தன்னை பாசமாக வளர்த்து வந்த தந்தையை தன் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு, தந்தைக்கு மெழுகு சிலை செய்துள்ளார்.

marriage

அதன் பிறகு, தனது தந்தையின் மெழுகுச் சிலையை தனது திருமண விழாக்களில் பங்கேற்கச் செய்தார். இது உறவினர்கள் மத்தியில்  கண் கலங்க செய்ய வைத்துள்ளது. மேலும் திருமண ஊர்வலத்தின் போது தந்தையை அருகில் வைத்துக்கொண்டது பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web