உயிரிழந்த தாய் சடலத்துடன் 6 நாட்களாக வாழ்ந்து வந்த மகன்.. விசாரணையில் பெரும் அதிர்ச்சி!

 
காதர்

தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயின் குலாபுதீன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி ஆஷா பைரோஸ் (44). கடந்த பல வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியூர் சென்று வந்துள்ளார். இவர்களுக்கு முகமது குலாம் காதர் (22) என்ற மகன் உள்ளார். காதர் பொதுவாக வெளியாட்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில்லாதவர்.

வீட்டில் தாயும் மகனும் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ளவர்கள் புகார் கூறி வந்தனர். நேற்று, இவரது வீட்டில் இருந்து வெளியேறும் கட்டடத் தொழிலாளர்கள் சிலர், சந்தேகமடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காதரை விசாரணை நடத்தினர். அப்போது தனது தாய் ஆஷா கடந்த 2ம் தேதி இறந்து விட்டதாகவும், தாயின் உடலுடன் 6 நாட்களாக இருந்ததாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஷாவின் உடலில் காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து, உடல் வீங்கி இருந்தது. மேலும் சில கட்டிட தொழிலாளர்களை அழைத்து வந்து வீட்டின் ஓரத்தில் குழி தோண்டி அதில் ஆஷாவின் உடலை புதைத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸின் உடலை நாளை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆஷா பைரோஸ் பிரேத பரிசோதனைக்கு பின் இயற்கையாக இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள காதருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web