பெரும் பரபரப்பு... சொத்துத் தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுக்கா சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 70 வயது பூலைய்யா . இவரது மனைவி லட்சுமி. தம்பதியின் ஒரே மகன் கணேசன். இவரது மனைவி சங்கரம்மாள். விவசாயம் செய்து வந்த பூலைய்யா வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் பூலைய்யா தனது தந்தை கொம்பையாவின் சொத்துக்களை விற்கும் சூழல் ஏற்பட்டதால் அதனை விற்றுவிட்டதாக தெரிகிறது.
இந்த விற்பனையின் மூலம் பூலைய்யாவுக்கு ஒரு கோடியே ரூ40 லட்சம் வரை பணம் வந்துள்ளது. அதனை தனது உடன் பிறந்த சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு தனது ஒரே மகனான கணேசனுக்கும் ரூ5 லட்சம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட கணேசன் தன்னுடைய மகளுக்கு தங்க நகை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் பிறகு கணேசன் தனது வீட்டை இடித்து கட்டுவதற்கு கூடுதலாக 10 லட்சம் ரூபாய் கேட்டு தந்தை பூலைய்யாவிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த தந்தை பூலைய்யா மருத்துவமனைக்கு செல்லும் வகையில் முத்தூர் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த மகன் கணேசன் பணம் கேட்டு தந்தை பூலைய்யாவிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்க முடியாது என்று தந்தை பூலைய்யா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் தந்தையை 70 வயதை தொட்ட முதியவர் எனக் கூட பார்க்காமல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூலைய்யாவின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணேசன் மற்றும் கணேசனின் மனைவி சங்கரம்மாள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!