கடனை திருப்பி தராத மகன்.. ஆத்திரத்தில் தந்தையை அடித்து உதைத்த காவலர்.. அதிரடியாக பணியிடை மாற்றம்!

 
வேல்முருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கொம்பு வாட்டர்ஹோல் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (47). மகன் கார்த்திக், தந்தையிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், சரியாக வீட்டுக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திக் தனக்கு தெரிந்த பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் கார்த்திக் கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வேல்முருகன் வீட்டிற்கு சென்று கடனை கேட்டுள்ளனர். அப்போது வேல்முருகன், “என் மகன் கார்த்திக் வீட்டுக்கு வருவதில்லை. கடன் வாங்கியது பற்றி எதுவும் தெரியாது’ என கூறி அனுப்பியதாக தெரிகிறது. இதனால், பணம் கொடுத்தவர்கள் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமுகை காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் மற்றும் காவலர்கள் கார்த்திக் வீட்டிற்கு விசாரணைக்காக சென்றனர். அப்போது கார்த்திக் வீட்டில் இல்லாததால், அவரது தந்தை வேல்முருகனை விசாரணைக்காக சிறுமுகை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவர் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், வேல்முருகனை காலால் உதைத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ரஞ்சித்தை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web