காய்ச்சலில் மகன் இறந்த சோகம்... துக்கத்தில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை!

 
வத்சலா தம்பதியர் தற்கொலை

வைரஸ் காய்ச்சல் காரணமாக மகன் உயிரிழந்த நிலையில், பெற்றோர் இருவரும் சோகத்தில் விஷம் குடித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் பழனிசாமி(39). இவரது மனைவி வத்சலா(35). கடந்த சில ஆண்டுகளாக இந்த தம்பதியர் கோவை மாவட்டம் வேடபட்டி பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி பழனிசாமி - வத்சலா தம்பதியர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். நேற்று நவம்பர் 4ம் தேதி இவர்கள் லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

விஷம்

அறையை விட்டு வெளியே வராத நிலையில், இது குறித்து சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் பழனிசாமி இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அறைக்கதவை மாற்றுச் சாவியை பயன்படுத்தி திறந்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது லாட்ஜ் அறைக்குள் பழனிசாமி - வத்சலா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர். உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.  ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் அவர்கள் இருவரையும் பரிசோதித்து பார்த்த போது அவர்கள் இருவருமே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், போலீசாரின் விசாரணையில் பழனிசாமி - வத்சலா தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருந்தார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர்களது மகன் கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததால் பழனிசாமி - வத்சலா தம்பதியர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மகனின் இழப்பைத் தாங்க முடியாததால் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web