”இவங்க எல்லாம் மூவி சோபா”.. எல்.ஐ.சி பட செட்டில் Fun Moment.. சோபா பாய் வீடியோ வைரல்.!
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இளம் தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டியை கதாநாயகியாக எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
Meet our #LIC Team's new Publicity Manager 😉
— Rowdy Pictures (@Rowdy_Pictures) February 3, 2024
Sneak peek from the sets! 👀
.@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty #RaviVarman #shivashahra_official
.#LoveInsuranceCorporation #rowdypictures pic.twitter.com/ODchdgKlKb
படத்தின் வேலைகள் கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது, பின்னர் படத்திற்கு 'எல்ஐசி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் சோபா விற்பனையில் பிரபலமான நிஃப்யா பர்னிச்சர் முகமது ரசூல் என்ற சிறுவன் இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் அச்சிறுவன் இருக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் அச்சிறுவன், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், ரவிவர்மன் போன்றோர் சோஃபாக்களாக நடித்து கிண்டல் செய்வது போல் ஜாலியாக பேசுகிறார்கள். முடிவில், “எல்லாம் சோபா என்றால், எல்ஐசி படத்தைப் பாருங்கள். எல்லா சோஃபாக்களும் அதில் இருக்கும்” என்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க